தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் – பிரதமர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் - பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் மோடி ஜி இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 40 லட்சம் பெண்கள் பயனடைந்து வருவதாக கூறியுள்ளார்.

பெண்களுக்கு இலவச கேஸ்:

திருப்பூர் மாவட்ட பல்லடத்தில் இன்று நடைபெறவுள்ள “என் மண் என் மக்கள்” பாதையாத்திரையின் நிறைவு விழாவில் பா.ஜ.க கட்சியின் தலைவரும் இந்திய பிரதமருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் 02 நாட்கள் சுற்று பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன் முதல் நாளான இன்று கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தடைந்தார். பிறகு நிறைவு விழாவிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்தவரை தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.85,090/- || நேர்காணல் மட்டுமே!

இந்த நிறைவு விழாவின் போது, இம்மாநாட்டை பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல இருக்கிறது, ”என் மண் என் மக்கள்” யாத்திரை மூலம் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என தனது பேச்சை துவங்கிய பிரதமர். பிறகு எங்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள “40 லட்சம் பெண்கள்” இது வரை பயன் பெற்றுள்ளார்கள். மேலும் எங்களால் கொண்டு வரப்பட்ட இலவச ரேஷன் அரிசி திட்டம் மற்றும் சொந்த வீடு கட்ட வழங்கப்பட மானிய திட்டத்தின் மூலம் பல லட்சம் நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்றும், தமிழகத்தில் மட்டும் 3.5 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!