
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part A – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 1- இலக்கணம் ; பகுதி 2 – சொல்
பிரிவு A – வேர்ச்சொல் அறிதல்: வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்ச வகை அறிதல்.
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு A – I. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்
ஒரு சொல்லின் அடிப்படைச் சொல் அல்லது மூலச்சொல் ஆனது வேர்ச்சொல் என அழைக்கப்படுகிறது. மேலும், ஒரு வினை அல்லது செயல் முற்று பெற்று வரும் சொல்லின் வினைமுற்று என கருதப்படுகிறது. அந்த வகையில், வினைமுற்று சொல்லில் இருந்து வேர்ச்சொல்லை பிரித்து அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- ‘கொடுத்தான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லை கண்டுபிடி.
- . கொடுத்த
- கேடு
- கெடு
- கொடு
2. ‘தேர்ந்தார்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் எது ?
- தேர்ந்து
- தேர்ந்த
- தேர்
- தேடு
3.‘பாய்ச்சினார்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் கண்டுபிடி .
- பாய்ச்சு
- பாய்ச்சிய
- பாய்
- பாய்ச்சியது
4. ‘பிளந்தான்’ என்னும் வினைமுற்று சொல்லின் வேர்ச்சொல் எது ?
- பிளந்த
- பிள
- பிளக்க
- பிளந்தார்
5. ‘கண்டான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லை கண்டுபிடி.
- கண்ட
- கண்டு
- காண்
- கண்டாள்
- பிரிவு B – I. வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சத்தை அறிதல்
முற்றுப்பெறாத வினைச்சொற்கள் வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும். மேலும், இவை காலத்தை அடிப்படியாக கொண்டு இறந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால வினையெச்சம் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. எனவே, ஒரு வினையெச்ச சொல்லில் இருந்து அதன் வேர் சொல்லை பிரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- ‘உண்டு’ என்ற வினையெச்சத்தின் வேர்ச் சொல்லை கண்டுபிடி.
- உண்டார்
- உண்
- உண்க
- உண்டான்
2. ‘தொட்டது’ என்னும் வினையெச்ச சொல்லில் இருந்து வேர்ச்சொல்லை பிரிக்கவும்.
- தொட்ட
- தொட்டு
- தொடு
- தொடுக
3. ‘வீழ்ந்தான்’ என்ற வினையெச்சத்தில் இருக்கும் வேர்ச்சொல் எது ?
- வீழ்க
- வீழ்ந்த
- வீழ்ந்து
- வீழ்
4. ‘குத்தினார்’ என்னும் வினையெச்சத்தில் இருந்து வேர்ச் சொல்லை கண்டுபிடி.
- குத்து
- குத்தினான்
- குத்தி
- குத்துக
5. ‘அரிந்தார்’ – வேர்ச்சொல்லை கண்டறியவும்
- அரிந்து
- அரி
- அரிந்தன
- அரிவான்
பிரிவு C – I. வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரை அறிதல்
வினைமுற்றுகள் பெயர் மாறி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்று பெறுவது வினையாலணையும் பெயர் எனப்படும். மேலும், பாடியவன், வந்தான், பெற்றான் போன்ற இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். எனவே, வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயர் மற்றும் அவற்றில் இருந்து வேர்ச்சொல்லை அறிய கீழே கொடுக்கப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- ‘பெறு’ என்னும் வேர்ச்சொல்லை கொண்டு வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- பெற்றான்
- பெற்று
- பெறல்
- பெற்றோரை
2. ‘கண்டாரை’ என்னும் வினையாலணையும் பெயரில் இருந்து வேர்ச்சொல்லை கண்டறியவும்.
- கண்டான்
- கண்டு
- கண்டுகொள்
- கண்டாள்
3. ‘தொடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை கண்டுபிடிக்கவும்.
- தொட்டது
- தொட்டு
- தொட்டவனை
- தொடல்
4. ‘ஓடியதை’ என்னும் வினையாலணையும் சொல்லில் இருந்து வேர்ச்சொல்லை பிரிக்கவும்.
- ஓட்டம்
- ஓடு
- ஓடிய
- ஓடினான்
5.‘கொய்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- கொய்தவனை
- கொய்தல்
- கொய்தது
- கொய்து
பிரிவு D – I. வேர்ச்சொல்லில் இருந்து பெயரெச்ச சொல் வகை அறிதல்
பெயரெச்சம் என்பது, பெயர்ச்சொல் ஏற்று முடிவு பெறும் எச்ச வினைச்சொல் ஆகும். இசை, தெரிநிலை பெயரெச்சம் மற்றும் குறிப்பு பெயரெச்சம் என இரண்டு வகைப்படும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லில் இருந்து பெயரெச்ச சொல் அறிவதற்கு முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரை கொண்டு முடிக்கும் சொல்லை தேர்ந்தெடுக்கவும்.
- ‘படித்த’ என்ற பெயரெச்சத்தின் வேர்ச்சொல்லை கண்டறியவும்.
- படித்து
- படிக்க
- படி
- படிப்பார்
2. ‘வீழ்ச்சி’ என்னும் தொழில் பெயரில் இருந்து வேர் சொல்லை தேர்ந்தெடுக்கவும்.
- வீழ்ந்து
- வீழ்த்தவனை
- வீழ்வார்
- வீழ்
3. ‘பூசு’ என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் கண்டறியவும்.
- பூசுவார்
- பூசினார்
- பூசிய
- பூசியவர்
4.‘இயற்று’ என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் தேர்ந்தெடுக்கவும்.
- இயற்றிய
- இயற்று
- இயற்றி
- இயற்றுனர்
5. பின்வருவனவற்றில் ‘பறித்த’ என்ற பெயரெச்சத்தின் வேர்ச்சொல் எது ?
- பறித்து
- பறித்தான்
- பறி
- பறிப்பார்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தெரிந்து கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.
Join ExamsDaily Whatsapp Group

























