டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!

0
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு - பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு - பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இம்முறை வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறி இருந்த நிலையில், கொரோனா வைரஸ், பெரியார் மற்றும் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தது.

குரூப் 1 முதல்நிலை தேர்வு:

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட 66 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 1.31 லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதினர். கொரோனா பரவல் காரணமாக சானிடைசர், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றது. மேலும் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. குரூப் 1 தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

Download TNPSC Group 1 Question Paper

ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 200 வினாக்கள் (300 மதிப்பெண்கள்) ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்று இருந்தது. இதில் பொது அறிவியலில் 175, திறனறிவில் 25 என 200 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இம்முறை பதில் தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் கூடுதலாக (E) ஆப்சன் கொடுக்கப்பட்டு இருந்தது.

TNPSC Group 1 Answer Key 2020 – 2021 || குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பு

தந்தை பெரியார் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், சுய மரியாதை இயக்கத்தின் தத்துவம், சென்னை மாநில சுயமரியாதை இயக்கத்தை முதலாவதாக தலைமையேற்று நடத்தியவர் யார், தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர், நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. தினசரி நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

TNPSC குரூப் 1 தேர்வு – 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட், புதிய கட்டுப்பாடுகள்!!

அதுமட்டுமின்றி ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய விமர்சனம் தொடர்பான கேள்வியும் இடம் பெற்று இருந்தது. மேலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் பற்றியும், அதனால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. குரூப் 1 தேர்விற்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!