TNPSC குரூப் 1 தேர்வு – 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட், புதிய கட்டுப்பாடுகள்!!

0
TNPSC குரூப் 1 தேர்வு - 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட், புதிய கட்டுப்பாடுகள்!!
TNPSC குரூப் 1 தேர்வு - 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட், புதிய கட்டுப்பாடுகள்!!
TNPSC குரூப் 1 தேர்வு – 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட், புதிய கட்டுப்பாடுகள்!!

தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பித்த 1.25 லட்சம் பேர் (49%) ஆப்சென்ட் ஆகி உள்ளனர். குரூப் தேர்வில் இவ்வளவு சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முறைகேட்டை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன.

குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் காலியாக உள்ள 18 துணை ஆட்சியர், 19 துணை காவல் கண்காணிப்பாளர், 14 கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், 10 வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி மற்றும் 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் என மொத்தம் 66 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற கடந்த வருடம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 2,56,954 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முதல் கருத்துக்கேட்பு!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முறைகேடுகளை தடுக்க விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தது. குரூப் 1 முதல்நிலை தேர்வு சரியாக காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் 856 தேர்வு மையங்களில் தொடங்கியது. இம்முறை தேர்வர்கள் காலை 9.15 மணிக்கே தேர்வறைக்கு வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

TNPSC Group 1 Answer Key 2020 – 2021 || குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பு

சில நிமிடங்கள் தாமதமாக வந்தவர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். தேர்வு சரியாக பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. இம்முறை விண்ணப்பித்த 2.56 லட்சம் பேரில் 1.31 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1.25 லட்சம் பேர் ஆப்சென்ட். TNPSC தேர்வில் இவ்வளவு தேர்வர்கள் ஆப்சென்ட் ஆவது இதுவே முதல்முறையாகும். தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தலைமையில் அதிரடி சோதனைகள் நடைபெற்றது.

தேர்வு நிறைவடைந்ததும் விடைத்தாள்கள் ஜிபிஎஸ் லாக் செய்யப்பட்ட பேட்டியில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இம்முறை வினாக்கள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!