குரூப் 1, குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…, டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழக அரசில் காலியாக உள்ள பதவிகளுக்கு TNPSC மூலம் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு குறித்து TNPSC தலைவர் பிரபாகர் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, TNPSC ஏற்கனவே வெளியிட்ட ஆண்டு தேர்வு கால அட்டவணையின்படி, குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 11,000 நிதிஉதவி…மத்திய அரசின் அருமையான திட்டம் இதோ
மேலும், தேர்விற்கான துறை வாரியான காலிப்பணியிடங்களும் அந்த அறிவிப்பில் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேர்வர்கள் சிறிதும் குழப்பமில்லாமல் தேர்வு எழுதுவதற்காக, விடைத்தாளின் நடைமுறையை எளிதாக மாற்றியுள்ளோம் என்றும், இனிமேல் இந்த நடைமுறையில் தான் TNPSC-யின் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எந்தவித தவறும் இன்றி விரைவாக வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


























