TNPSC தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

0
TNPSC தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!
TNPSC தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

TNPSC தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசுப் பணிகளை பூர்த்தி செய்ய அவ்வப்போது தேர்வு நடத்தி வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு சேவை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு காலகட்டங்களில் தேர்வுக்கான அறிவிப்பிகள் வெளியிடப்பட்டு அதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலை தேர்வும் முதன்மை தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வு என பணிக்கு ஏற்றாற் போல் பல்வேறு நிலையில் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த தேர்வுகள் அனைத்தும் பொரும்பாலும் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தபடும். ஆனால் சமீப காலமாக இந்த பணிகளுக்கான தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

கடந்த வருடம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு புகார்கள் அதிக அளவில் எழுந்தது. தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக நடத்தப்பட்ட அத்தேர்வுகளிலும் இதே நிலை நீடித்தது. உச்சகட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளிலும் கூட முறைகேடுகள் நடைபெறுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்றைய சூழல் கொரோனா தொற்றின் பரவலும் அதிக அலையில் உள்ளது. இதனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவது கடினமாகும். மேலும் சுழற்சி அடிப்படையில் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

TNPSC தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைனில்:

இது போன்ற பல்வேறு குளறுபடிகள், சிக்கல்கள் ஏற்படுவதனை தவிர்க்க தற்போது மாற்று யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. விரைவில் இது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!