TNPSC Departmental Exam May இறுதி தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மே 2023 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு இறுதி முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC மே துறைத்தேர்வு முடிவுகள்:
அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு மே மாதம் Objective Type in Computer Based Test தேர்வுகள் 15.05.2023 முதல் 19.05.2023 வரையிலும், Descriptive Type தேர்வுகள் 22.05.2023 முதல் 25.05.2023 வரையிலும் நடைபெற்றது. அதன் பின், இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 19 ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
தற்போது தேர்வாணையம் இந்த Viva -Voce தேர்வின் நிராகரிப்புப் பட்டியலை https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியில் வெளியிட்டுள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.