கால்நடை ஆய்வாளர் பணிக்கு தேர்வுகள் நடைபெறவில்லை…!! TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்…!!

2
??????? ???????? ??????? ????????? ????????????...!! TNPSC ????????? ??????? ?????...!!
கால்நடை ஆய்வாளர் பணிக்கு தேர்வுகள் நடைபெறவில்லை...!! TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்...!!

கால்நடை ஆய்வாளர் பணிக்கு தேர்வுகள் நடைபெறவில்லை…!! TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்…!!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள கால்நடை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் தற்போது கால்நடை ஆய்வாளர் பணிக்கு என மொத்தம் 1,375 காலிப்பணியிடங்கள்  உள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. மேலும் , 2011 ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 13 வருடங்களாக இந்த பணிக்கு நியமனங்கள் செய்யப்படாததால், பல கிராமங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பின்னர்   தகவல் ஒன்று  வெளியானது  .

 list of  Reserve Bank of India Governor from 1935 to 2024 in Tamil – Free PDF Download

இதற்கு, கால்நடை பராமரிப்பு துறையினர், “முன்னர் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற்றதாகவும், தற்போது TNPSC மூலம் நடைபெறுவதால் கால தாமதம் ஏற்படுவதாக” தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “கால்நடை ஆய்வாளர் பணிக்கான தேர்வு TNPSC மூலம் நடத்தப்படுவதால் தான் கால தாமதம் ஏற்படுகிறது என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என்றும், “இந்த பணிக்கு தேர்வுகள் நடத்துவதற்கு, கால்நடை பராமரிப்பு துறையால் இதுவரை எந்தவித அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை” என்றும் அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

2 COMMENTS

  1. There is 97 Veterinary Nursing Assistants who completed certificate course during 2015-16,2016-17 batch at TANUVAS waiting for livestock Inspector gr 2 and court case is pending.. Now the course is stopped..Government have to take action..

  2. கால்நடை ஆயிவாளர் தேர்வுக்கு என்ன படிப்பு தகுதி??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!