2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்  நாளை தாக்கல்…இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

0
2025-26??? ??????????????? ????????? ???????  ???? ???????...?????????? ???????????? ????? ????????
2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்  நாளை தாக்கல்...இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்  நாளை தாக்கல்…இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்

 

தமிழக சட்டப்பேரவையில் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெடை  நாளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், இதற்காக சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025 -2026” யை  வெளியிட்டார். அதாவது, ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் மத்திய பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட படுவது வழக்கம்.

அதேபோல், தமிழ்நாட்டில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு நிதியாண்டில் வெளியிட பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தற்போது “எல்லார்க்கும் எல்லாம்” என்ற வாசகத்துடன் கூடிய 2025 -2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான  இலச்சினை ஒன்றையும் தமிழக முதல்வர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட  இலச்சினையில்  இருந்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளதால், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!