தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும் !!

1
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும் !!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும் !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
தமிழ் தெரிந்தால் போதும் !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) மூலம் தமிழகத்தின் இராமநாதபுரத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஜீப் / கார் ஓட்டுநர், ஜெனரேட்டர் ஓட்டுனர், பெரியறை, பத்துவிளக்கி, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம்நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்புகாவல் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஜீப் / கார் ஓட்டுநர், ஜெனரேட்டர் ஓட்டுனர், பெரியறை, பத்துவிளக்கி, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம்நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்புகாவல்
பணியிடங்கள் 28
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஜீப் / கார் ஓட்டுநர், ஜெனரேட்டர் ஓட்டுனர், பெரியறை, பத்துவிளக்கி, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம்நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்புகாவல் பணிகளுக்கு என 28 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNHRCE கல்வித்தகுதி :
 • கணினி இயக்குநர் – 10வது தேர்ச்சியுடன் Diploma in computer science முடித்திருக்க வேண்டும்.
 • தட்டச்சர் – 10வது தேர்ச்சியுடன் தட்டச்சில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
 • நாதஸ்வரம் – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாதஸ்வர அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இசைப் பள்ளியில் பயின்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 • ஜீப் / கார் ஓட்டுநர் – SSLC தேர்ச்சி மற்றும் LMV ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 • ஜெனரேட்டர் ஓட்டுனர் – ITI தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெரியறை – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் அபிசேகங்களுக்கான சாமான்கள் உரிய காலத்தில் எடுத்துக் கொடுத்தல் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
 • பத்துவிளக்கி – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 • சாதகாச்சாரி – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், வேத பாட சாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

 • உபகைங்கர்யம் – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருக்கோயில் பூஜை முறைகள் தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
 • மகன்யாசம் – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
 • 2ம்நிலை சபையார் – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
 • தீவெட்டி – தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். தீவட்டி சண்டுகள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
 • திருச்சின்னம் – திருச்சின்னம் கருவி இசைக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சான்று பெற்றிருத்தல் நலம்
 • திருமாலை கட்டி – திருக்கோயில் நந்தவனத்தில் பூக்களை எடுத்து சுவாமி சாத்துப் படிக்கான பூக்கள் மற்றும் மாலைகள் தொடுப்பதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • தோப்புகாவல் – தோப்பு பராமரிப்பு மற்றும் காவல் பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில், Rameswaram – 623526 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

TNHRCE Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!