பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்..!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்று (07.02.2025) முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே, ‘வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்’ என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ‘தமிழ்நாட்டில் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், ‘பராமரிப்பு பணிகளுக்காக வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை மின் தடை செய்யக்கூடாது’ என்றும் அறிவித்துள்ளது. மேலும், ‘மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.


























