
“5 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த ரெப்போ வட்டி விகிதம்…!!” ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ரெப்போ வட்டி விகிதம் என்பது அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் ஆகும்.
இந்நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% லிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 11 முறை இந்த நிதி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது தான் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைவால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























