தமிழக மின் வாரியத்தின் 2900 கள உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு !!

0
தமிழக மின் வாரியத்தின் 2900 கள உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு !!
தமிழக மின் வாரியத்தின் 2900 கள உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு !!

தமிழக மின் வாரியத்தின் 2900 கள உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு !!

தமிழக மின் வாரியத்தில் இருந்து கள உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டு இருந்த உடற்தகுதி தேர்வுகள் ஆனது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNEB Field Assistant காலிப்பணியிடங்கள் :

தமிழக மின் வாரியத்தில் மொத்தம் 2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் அந்நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவி வந்ததால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மீண்டும் அதற்கான ஆன்லைன் பதிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. ஆன்லைன் பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதிவு செய்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த கட்ட தேர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு :

பணியிட அறிவிப்பின் படி முதற்கட்டமாக இப்பணிக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே அடுத்த கட்டமாக எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு உடற்தகுதி தேர்வு ஆனது இந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தமிழக மின்சாரா வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை பரவி வருவதால் இந்த உடற்தகுதி தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழக மின் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!