தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இணையதள பதிவு – ஏப்ரல் 24 முதல் தொடக்கம்!!

0
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இணையதள பதிவு - ஏப்ரல் 24 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இணையதள பதிவு – ஏப்ரல் 24 முதல் தொடக்கம்!!

நாடு முழுவதும் உள்ள 18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்காக ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் போடப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 60 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி மறைமுக தகவல்!!

அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள,

  • cowin.gov.in இணையதளத்தை லாகின் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP எண்ணை பதிவு செய்து VERIFY பட்டனை கிளிக் செய்யவும்.
  • OTP எண் சரிபார்க்கப்பட்டு, Register பக்கம் திறக்கும்.
  • அதில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் Photo ID Proof உட்பட பதிவு செய்ய வேண்டும்.
  • பிறகு கீழ் உள்ள Register பட்டனை கிளிக் செய்யவும்.
  • Register முடிந்ததும் உங்கள் கணக்கு விவரங்கள் காட்டப்படும்.
  • அதில் உங்கள் விருப்பத்தின் படி தடுப்பூசி போடும் நேரத்தை தேர்வு செய்யலாம்.
  • வேறு சிலரை அதில் சேர்க்க விரும்பினால் Add More பட்டனை கிளிக் செய்யவும்.
  • பிறகு மேலே குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!