தமிழக தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக இம்மாத தொடக்கத்தில் புதிய அறிவிப்பு வெளியானது. அதில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற வணிகவியல் பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவுறும் நிலையில் உள்ளதால் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNDTE தகுதி :
தேர்வின் பிரிவிற்கேற்ப 6/ 8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத் தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.20/- செலுத்த வேண்டும்.
TN Job “FB Group” Join Now
தேர்வு கட்டணம் :
தேர்வு எழுதுவோர்க்கு பிரிவு வாரியாக கீழே கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
- இளநிலை – ரூ.65/-
- இடைநிலை – ரூ.80/-
- முதுநிலை – ரூ.85/-
- உயர்வேகம் – ரூ.130/-
கட்டணமே செலுத்த கடைசி நாள் (அபராதம் இன்றி) – 26.03.2021
விண்ணப்பிக்க முறை :
TNDTE இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் விரைவாக இப்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.