TNDTE GTE 2024 தேர்வு – Time Table சற்றுமுன் வெளியீடு!

0
TNDTE GTE 2024 தேர்வு - Time Table சற்றுமுன் வெளியீடு!
TNDTE GTE 2024 தேர்வு - Time Table சற்றுமுன் வெளியீடு!
TNDTE GTE 2024 தேர்வு – Time Table சற்றுமுன் வெளியீடு!

TNDTE என்னும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆனது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தட்டச்சு பிரிவிற்கான Government Technical Examination குறித்த தற்காலிக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNDTE GTE 2024 கால அட்டவணை:

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது தட்டச்சு பயிற்சிக்கான Government Technical Examination 2024 பற்றிய தற்காலிக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணை ஆனது https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (17.11.2023) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான GTE தேர்வானது பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாக நடைபெறவுள்ளது.

இக்கால அட்டவணையில் GTE 2024 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நாள், விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள், விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் தேர்வு நடைபெறவுள்ள நாள் மற்றும் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் நாள் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதன் படி, பிப்ரவரி மாதம் (Session 1) நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிப்பானது 10.12.2023 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 12.12.2023 அன்று முதல் 11.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. பிறகு Shorthand High Speed / Shorthand Junior, Intermediate, Senior / Accountancy Junior and Senior / Typewriting Junior, Senior and High Speed ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் 10.02.2024 அன்று முதல் 26.02.2024 அன்று வரை நடத்தப்பட்டு முடிவுகள் 23.04.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

MHA உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2023 – ரூ.20200/- வரை மாத ஊதியம்!

GTE 2024 தேர்வின் இரண்டாம் பிரிவான ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிப்பானது 09.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 11.076.2024 அன்று முதல் 11.07.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இதனை தொடர்ந்து Shorthand High Speed / Shorthand Junior, Intermediate, Senior / Accountancy Junior and Senior / Typewriting Junior, Senior and High Speed ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் 10.08.2024 அன்று முதல் 26.08.2024 அன்று வரை நடத்தப்பட்டு முடிவுகள் 22.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளதாகவும் இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு கால அட்டவணையை காணவும்.

Download TNDTE GTE 2024 Time Table Link
Official Website Link 

TNPSC Online Classes

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!