படிக்கும் போதே பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு திட்டம்…!! தமிழ்நாடு அரசின் இந்த சலுகையை பெறுவது எப்படி…??

0
படிக்கும் போதே பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு திட்டம்...!! தமிழ்நாடு அரசின் இந்த சலுகையை பெறுவது எப்படி...??
படிக்கும் போதே பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு திட்டம்...!! தமிழ்நாடு அரசின் இந்த சலுகையை பெறுவது எப்படி...??

படிக்கும் போதே பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு திட்டம்…!! தமிழ்நாடு அரசின் இந்த சலுகையை பெறுவது எப்படி…??

 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் மூலம் நிதி உதவிகளை  வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் “கிராமப்புறப் பெண்கள் ஊக்கத்தொகை திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் (DNC) மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்….தமிழகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு…!!

அதன்படி, கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 500 ரூபாயும், 6 ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,000 நிதியுதவியும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டம் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பயனாளி தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் தங்களது கிராமப்புறங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!