தமிழகத்தில் நாளை (நவம்பர் 13) மின்தடை – மக்களுக்கு அலர்ட் நியூஸ்!!
தமிழகத்தில் வானிலை காரணமாக அவ்வப்போது மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
வங்கிகளுக்கு 3 நாட்கள் அரசு விடுமுறை – தீபாவளி லீவு விவரம் இதோ!
அதாவது நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.