தமிழக அரசு வழங்கும் ரூ.1500 உதவித்தொகை – வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்!

0
தமிழக அரசு வழங்கும் ரூ.1500 உதவித்தொகை - வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்!
தமிழக அரசு வழங்கும் ரூ.1500 உதவித்தொகை - வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்!
தமிழக அரசு வழங்கும் ரூ.1500 உதவித்தொகை – வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளில் அரசின் உதவித்தொகை பெறுவதற்காக தங்களது வாழ்நாள் சான்றிதழை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட திருச்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சான்றிதழ் சமர்ப்பித்தல்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுபவர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் 40%க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வரை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்புபவர்கள் அவர்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் சம்பளம் உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உதவித்தொகைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் அவர்களது வாழ்நாள் சான்றிதழை கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து அதற்கான படிவத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்படிவத்தை இணையதளம் வழியாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – டெல்லி அரசு அறிவிப்பு!

அந்த சான்றிதழை பெற்ற பின்னாக அவற்றை சரியாக பூர்த்தி செய்து VAO அல்லது அரசு பதிவு பெற்ற அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று அதற்குரிய சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்னாக நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம். இது குறித்த மேலும் விவரங்களை 1431 – 2412590 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக வட்டாட்சியரகத்தின் மூலம் மாதாந்திர உதவித்தொகை பெறும் நபர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here