அரசு பள்ளிகளில் இனி இந்த செயல்முறை கட்டாயம்.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

0
???? ?????????? ??? ???? ????????? ????????.. ????? ??????????? ????????? ??????? ?????????..!!
அரசு பள்ளிகளில் இனி இந்த செயல்முறை கட்டாயம்.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

அரசு பள்ளிகளில் இனி இந்த செயல்முறை கட்டாயம்.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக, “தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு “வாசிப்பு வாரம்” (Reading Week) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது”. அதாவது, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தையும், மொழி திறனையும் ஊக்குவிப்பதற்கான இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்த முக்கிய தகவல்..!!

இத்திட்டம் ஆனது அரசு பள்ளிகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் முயற்சி என பள்ளிக்கல்வித் துறை செயலாளர் செந்தில் குமாரின் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வாரம் முதல் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள், கதை வாசிப்பு, உரையாடல் போன்ற பல படைப்பாற்றல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த வாசிப்பு வாரம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை நடத்தப்படும். இதில் சிறந்த வாசிப்பு திறன்கள் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!