
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்த முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி முதல் மாணகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதாவது, அரசு தேர்வுத் துறை இயக்குநர் லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் “தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் சில பள்ளிகளின் திருத்தங்களை முறையாக மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் இருந்தால் அதை சரி செய்து சான்றொப்பமிட்டு மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஜூன் 13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group

























