
பழைய ஓய்வூதியம் குறித்து விரிவாக ஆராய்ந்திட சிறப்பு குழு நியமனம்.. பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யகூறி தமிழக அரசு உத்தரவு..
ஜனவரி 1, 2004 அன்று மத்திய அரசு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அறிமுகப்படுத்திய போதிலும், தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் (CPS) முறையை பயன்படுத்தி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வந்தது. மேலும், இந்த செயல்முறையை அரசு ஊழியர்கள் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரி விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம், “தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு” சட்டமன்றத்தில், ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறினார்.
அதாவது, “பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS)” ஆகிய 3 திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட “ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், நிதித்துறையின் துணைச் செயலாளர் பிரதிக் தயாள்” ஆகியோர் கொண்ட குழுவை ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மேலும், “மாநில அரசின் நிதிநிலை மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான சிறப்பு அறிக்கையை 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க கூறி தமிழக அரசு சிறப்பு குழுவிற்கு உத்தரவு அளித்துள்ளது”.

























