ரூ.2,500 மட்டும் போதும்.. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர முடியும்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

0
??.2,500 ??????? ??????.. ??? ??????? ???????? ?????????? ??? ????????.. ????? ???? ????????? ??????? ?????..!!
ரூ.2,500 மட்டும் போதும்.. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர முடியும்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

ரூ.2,500 மட்டும் போதும்.. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர முடியும்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர்கல்விக்கான கல்லூரி சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் படிக்க விரும்புகிறவர்களுக்கு தமிழகத்தில் மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு கடந்த மே 7 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பட்டப்படிப்புகளுக்கான முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

TNPSC Tamil Ilakkanam Eluthupilai, Otrupilai Arithal Study Material – Free PDF Download

அதாவது, நவீன தொழில்நுட்பத்தில் வளர்ச்சியின் காரணமாக கணினி பயன்பாடு சார்ந்த படிப்புகளுக்கு அரசு, தனியார் துறைகள் மட்டுமின்றி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் B.Sc, BCA மற்றும் IT படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வரும் மே 27 ஆம் தேதி வரை பெறப்படுகிறது”. மேலும், “இந்த படிப்பிற்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கு இதர கட்டணங்களுடன் சேர்த்து ஒரு வருடத்திற்கு ரூ.2,500 – ரூ.2,600 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, பருவ தேர்வுக்கான கட்டணங்கள் தேர்வின்போது செலுத்த வேண்டும். இறுதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர்கள் https://www.tngasa.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு சாதாரண மக்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் என்றும், SC/ST பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!