TNPSC Tamil Ilakkanam Eluthupilai, Otrupilai Arithal Study Material – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித் தேர்வு – எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
எழுத்துப்பிழை என்றால், எழுதப்பட்ட சொற்களில் தவறாக எழுதும் போது வரும் பிழைகள் ஆகும். இது எழுதும் போது மட்டுமின்றி தட்டச்சு செய்யும் போது ஏற்படக்கூடும். ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ, அதே மாதிரி எழுதாமல், வேறு மாதிரி எழுதும்போது ஏற்படும் பிழைகள் எழுத்துப்பிழைகள் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஒற்றுப்பிழை என்பது எழுதும்போதோ அல்லது வாக்கியங்களை இணைக்கும்போதோ ஏற்படும் ஒரு பிழையாகும். இது பெரும்பாலும் வல்லினம் மிக வேண்டிய இடங்களில் மிகாமலும், மிகாத இடங்களில் மிகுந்தும் கூட எழுதப்படுவதால் ஏற்படுகிறது.
இந்த பிழைகளை தவிர்க்க சொற்களை எழுதும் முன் அவற்றின் ஒலியை கவனிக்க வேண்டும். பின்னர் இயல்பு சொற்கள் மற்றும் வாழ்க்கைச் சொற்களைப் பழகி, அவற்றுள் எழுத்துப்பிழைகள் இருக்கிறதா என்று சரி பார்த்து எழுத வேண்டும். மேலும், தமிழ் இலக்கண விதிகளைப் படித்துப் புரிந்து கொள்வதன் மூலம், ஒற்றுப்பிழைகளைத் தவிர்க்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, உலகின் மிகப்பெரிய 10 ஏரிகள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Tamil Ilakkanam Study Materials – Free PDF Download
எழுத்துப்பிழை அறிதல்
| பல்லிக்குடம் | பள்ளிக்கூடம் |
| மக்கல் | மக்கள் |
| மலைநீர் | மழைநீர் |
| குறங்கு | குரங்கு |
| எண்ணை | என்னை |
| தெண்றல் | தென்றல் |
| கன்டம் | கண்டம் |
| நன்ரி | நன்றி |
| மன்டபம் | மண்டபம் |
| வென்னீர் | வெந்நீர் |
| உசிர் | உயிர் |
| ஊரணி | ஊருணி |
| சிகப்பு | சிவப்பு |
| வலதுபக்கம் | வலப்பக்கம் |
| தலைகாணி | தலையணை |
| சீயக்காய் | சிகைக்காய் |
| சுவரில் | சுவற்றில் |
| காவா | கால்வாய் |
| நாகரீகம் | நாகரிகம் |
| கயறு | கயிறு |
ஒற்றுப்பிழை அறிதல்
| ஓட காத்துறிக்கிறான் | ஓடக் காத்திருக்கிறான் |
| பாட கேட்டேன் | பாடக் கேட்டேன் |
| காண கொடுத்தான் | காணக் கொடுத்தான் |
| செய்ய சொன்னான் | செய்யச் சொன்னான் |
| எழுத தொடங்கினர் | எழுதத் தொடங்கினர் |
| பேச செய்தார் | பேசச் செய்தார் |
| விளையாட பார்த்தேன் | விளையாடப் பார்த்தேன் |
| நாடி சென்றேன் | நாடிச் சென்றேன் |
| பேசி பழகினேன் | பேசிப் பழகினேன் |
| தேடி திரிந்தேன் | தேடித் திரிந்தேன் |
| செதுக்கி கொடுத்தான் | செதுக்கிக் கொடுத்தான் |
| ஊன்றி படித்தான் | ஊன்றிப் படித்தான் |
| தழுவி கொண்டான் | தழுவிக் கொண்டான் |
| கொட்டி கிடக்கிறது | கொட்டிக் கிடக்கிறது |
| எட்டு கால் | எட்டுக்கால் |
| பத்து பேர் | பத்துப்பேர் |
| எட்டு தொகை | எட்டுத்தொகை |
| பத்து பாட்டு | பத்துப்பாட்டு |
| கேளா செவி | கேளாச்செவி |
| கிழக்கு பகுதி | கிழக்குப்பகுதி |


























