தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – ஏப்.11 ம் தேதி போராட்டம்.. அமைச்சர் பேச்சு வார்த்தை!
தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். தற்போது மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
போராட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
SBI கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி இதற்கெல்லாம் கேஷ்பேக் கிடையாது!
அதன் தொடர்ச்சியாக ஏப்.11ம் தேதி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்ட நிலையில், தற்போது முதல்வர் மீதான நம்பிக்கையில் போராட்டம் வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
—