அரசு கணினி சான்றிதழ் 2024 தேர்வு முடிவு – சற்றுமுன் வெளியீடு!

0
அரசு கணினி சான்றிதழ் 2024 தேர்வு முடிவு - சற்றுமுன் வெளியீடு!

 தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2024 ஆம் ஆண்டுக்கென நடத்தப்பட்ட அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான முடிவானது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு:

தமிழக அரசின் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய பணிகளில் சேர்வதற்கு அரசு கணினி சான்றிதழ் பெற்றிருப்பது மிக முக்கியமானது ஆகும். இத்தகைய சான்றிதழை பெறுவதற்கான அரசு கணினி சான்றிதழ் தேர்வானது தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும். இந்த வகையில் இவ்வாண்டுக்கான முதல் தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.,

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவானது இன்று (27.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இத்தேர்வு முடிவை பெற விரும்பும் நபர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை Login பக்கத்தில் சரியாக உள்ளிட வேண்டும். கூடுதல் தகவலுக்கு தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!