தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Assistant Director மற்றும் Junior Telecom Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.04.2024 வரை இவ்வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Assistant Director மற்றும் Junior Telecom Officer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

DOT காலிப்பணியிடங்கள்:

  • Assistant Director – 1 பணியிடம்
  • Junior Telecom Officer – 2 பணியிடங்கள்

மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் 3 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அல்லது PSU நிறுவனங்களில் 7வது cpc இன் நிலை 8 அல்லது 7வது ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

GRI காந்திகிராம கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,250/-

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள DOT அலுவலக முகவரிக்கு 26.04.2024 க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!