
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி… புதுமைப் பெண் திட்டத்தில் புதிய மாற்றம்.. முழு விவரங்களுடன்
2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான மேம்பாடு நிதியானது உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை கீழே விரிவாக காணலாம்.
இனி குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்…!! பட்ஜெட்டில் வெளியான சிறப்பு அறிவிப்பு..!!
அதாவது, QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெற செய்ய “செயல் திட்டம்” மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீலகிரி, சென்னை உட்பட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு கூடுதலாக 15,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதை தொடர்ந்து, வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்காக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இறுதியாக புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்தார்.

























