ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!! மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கை..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளில் திரைப்பட பாடல்களை ஒளிபரப்பக் கூடாது என்றும், சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக்கொள்ள கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சினிமா பாடலுக்கு 5 பள்ளி மாணவர்கள் நடனம் ஆடிய போது , அதில் ஒரு மாணவன் வீரப்பன் புகைப்படம் பதித்த டி-சர்டை கையில்பிடித்து காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித்துண்டை போட்டு நடனம் ஆடிய வீடியோ இணையத்தளத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பள்ளிக்கல்விதுறைக்கு வந்த வண்ணம் உள்ளன.
“குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதலுக்கு உகந்தது அல்ல”.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி அறிவித்த அதிர்ச்சி தகவல்..!!
இதை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ள தடையை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுப்படும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதும், இதுபோன்ற செயல்களை அனுமதிப்பவர்கள் மீதும் குடிமை பணிகள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


























