தமிழக அரசில் Data Entry Operator வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
Data Entry Operator பணிக்கு என தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் IDSP திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது புதிதாக வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட நலவாழ்வு சங்கம் காலிப்பணியிடங்கள்:
தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator கல்வி விவரம்:
- Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் Computer Knowledge பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Data Entry Operator வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Data Entry Operator ஊதிய விவரம்:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.13,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ESIC ஆணையத்தில் ரூ.1,12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
DHS தேர்வு செய்யும் முறை:
Data Entry Operator பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, LIC கட்டிடம் அருகில், தஞ்சாவூர் – 613 001 என்ற முகவரிக்கு 06.11.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.