தமிழகத்தில் நவ.10 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் – உணவுத்துறை அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் நவ.10 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் பொதுவாக இரண்டாவது, நான்காவது வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டாவது, நான்காவது வெள்ளிக்கிழமை இருக்கும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாக இருக்கும். இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடுமையான வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. ரூ.1000 அபராதம்!! நவ.4 முதல் அமல்!!
மேலும், பொதுமக்களின் தேவைக்காக இந்த வார நவ.5 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தீபாவளி பண்டிகையையொட்டி இந்த மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை நவ.10 ஆம் தேதியும் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் உணவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.