அக்.07 ‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ – நாளை ஹால்டிக்கெட் வெளியாகும்!
தமிழகத்தில் “முதலமைச்சர் திறனாய்வு தேர்வு” அக்.07 ம் தேதி நடைபெறும் நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (செப்.27) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட்:
தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
Join Our WhatsApp
Channel ” for Latest Updates
நடப்பாண்டு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்.07ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்காக இனி காவிரியில் நீர் திறக்க முடியாது – கர்நாடகா அரசு பிடிவாதம்!
மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பயனர் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஹால் டிக்கெட்டில் பெயர், தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா?என்பதை ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.