MHC சிவில் நீதிபதி தேர்வு முடிவு – மதிப்பெண்கள் வெளியீடு!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
MHC சிவில் நீதிபதி:
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி தேர்வின் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடித்து விட்டது. புதுச்சேரி நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கு 05.08.2023 மற்றும் 06.08.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
அக்.07 ‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ – நாளை ஹால்டிக்கெட் வெளியாகும்!
வழிமுறைகள்:
- முதலில் mhc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், அறிவிக்கையில் பகுதிகள் புதிய அறிவிப்புகள் இருக்கும்.
- உங்கள் தேர்வின் பெயரை தேர்வு கொள்ள வேண்டும்.
- இப்பொழுது திறக்கும் பக்கத்தில் உங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.