அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

0
???? ?????????????? ??????????? ??????.. ????? ??????????? ?????? ?????????..!!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

 

ஆண்டுதோறும் இரண்டு முறை மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான ஆகவிலைபடியை கடந்த மார்ச் 28 ஆம் தேதி உயர்த்துவதாக அறிவித்த நிலையில், தமிழ்கத்தில் எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Spices Board-ல் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – இறுதி வாய்ப்பு || முழு விவரங்களுடன்!

அதாவது, சட்டப்பேரவையில் இன்று (28-04-2025) அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி விதி எண் 110 இன் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, “அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை, அடுத்தாண்டு ஏப்ரலில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்” என கூறினார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!