இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Helper, Project Technical Support-III பணிக்கான காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ICAR -IARI காலிப்பணியிடங்கள்:
Office Helper, Project Technical Support-III பணிக்கென 3 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / B.Sc / PhD / M.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ICAR -IARI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25, 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Spices Board-ல் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – இறுதி வாய்ப்பு || முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.28,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.























