“தமிழ்நாட்டின் மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”.. பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

0
"????????????? ????????? ???? ????? ????? ???? ????????? ????????".. ??????????? ????? ??????????? ??.?.???????? ??????..
"தமிழ்நாட்டின் மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதி விடுவிக்க வேண்டும்".. பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

“தமிழ்நாட்டின் மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”.. பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

 

மத்திய அரசின் “சமக்ரா சிக்ஷா அபியான்” என்ற ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய பட்ஜெட் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதியை விடுவிக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசின் பள்ளிக்கல்வித் திட்டம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Championship Trophy 2025: முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி.. தொடர்ந்து தோல்வியை சந்தித்த வரும் பாகிஸ்தான் அணி..

அதாவது, “தமிழ்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, “சமக்ர சிக்ஷா” திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றி உள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக இருக்கும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!