தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதியும் மாற்றம் !!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதனால் அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் விடுபட்ட 11, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதியை வெளியிட்டார்.
தேர்வு தேதி ஒத்திவைப்பு:
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பில் இருத்தும் தேர்வுகளை ஒத்திவைக்க மனுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனால் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தேர்வை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
11, 12 ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வு தேதி மாற்றம்:
- 11 ஆம் வகுப்பில் நடைபெறாமல் இருக்கும் ஒரு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும்
- 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
10 ஆம் வகுப்பு தேர்வு புதிய அட்டவணை 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |