தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 93.80 % மாணாக்கர்கள் தேர்ச்சி என அறிவிப்பு..!!

0

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 4,113 தேர்வு மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தேர்வெழுதினர். இதை தொடர்ந்து, இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், மே 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மக்களின் கவனத்திற்கு.. நாளை (17-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

அதன்படி “இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மேலும், இத்தேர்வில் 93.80 % மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மாணாக்கர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!