அரசு மருத்துவக் கல்லூரியில் Dialysis Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் DEO, Dialysis Technician பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
DEO, Dialysis Technician பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Dialysis Technician / B.Sc in CS / BCA / Any Degree(Diploma in Computer Application) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,000/- முதல் ரூ.13,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























