திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி நெசவாளர்கள்.. கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம் …!! காரணம் என்ன தெரியுமா..?

0
?????????? ???? ??????? ????????????? ??????? ????????? ???????????.. ?????????????? ??????? ?????? ...!! ?????? ???? ????????..?
திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி நெசவாளர்கள்.. கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம் ...!! காரணம் என்ன தெரியுமா..?

திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி நெசவாளர்கள்.. கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம் …!! காரணம் என்ன தெரியுமா..?

 

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரு மாவட்டங்களும் தமிழகத்தின் முக்கிய ஜவுளி மையங்களாக செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு மாவட்டங்களையும் சேர்த்து தோராயமாக 2.5 லட்சம் விசைத்தறி நெசவாளர்களால் தினமும் ரூ.1.25 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை தொடர்ந்து, சுமார் 1.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் ஊதியத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இலவசமாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டம்…சாமானிய மக்களுக்கு அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

அதாவது, “கூலி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று (19-03-2025) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகளுக்கு மேல் இயங்காத நிலையில், நாளொன்றுக்கு சுமார் ரூ.35-40 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மின் கட்டணம், அலுவலக வாடகை, இயந்திரங்களின் உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில், அமைக்கப்பட்ட 15% ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!