தமிழக விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம் – முதல்வர் உத்தரவு!!

2
தமிழக விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம் - முதல்வர் உத்தரவு!!
தமிழக விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம் – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களை கவரும் வகையில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இந்த திட்டம் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மும்முனை மின்சாரம்:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர்.

8 வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லுமா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!!

மேலும் தேர்தல் அறிக்கைகளையும் மக்களை கவரும் வண்ணத்தில் அறிவித்துள்ளனர். தேர்தல் வரும் நேரத்தில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறார் தமிழக முதல்வர். அதில் ஒன்று தான் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பது. இதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும் தற்போதைய காலத்தில் தமிழகத்தில் 22 லட்ச விவசாய மின் இணைப்புகளுக்கு மின் வாரியம் இலவசமாக மின் விநியோகம் செய்து வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த அறிவிப்பினால் 500 மெகாவாட் கூடுதலாக அதிகரிக்கும். இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவித்த 24 மணி நேர மும்முனை மின்சாரம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ஏமாற்றுகிறவன் தேர்தல் நேரத்தில்தான் அதிகமாக ஏமாற்றுவான். அதில் மோடியும் எடப்பாடியும் உலகத்திலேயே நம்பர் ஒன்.நம்பர் ஒன் நம் நாட்டில் இருப்பதால் நமக்கு பெருமைதான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here