விஜய் அரசியலுக்கு வர இதுதான் காரணம்.. வெளியான புதிய தகவல்.. பரபரப்பில் அரசியல் களம்!!
‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் விஜய் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இதன் மூலம் அவர் தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. விவரம் உள்ளே!!
இந்த நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதில் ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான்’. ‘உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த சினிமாவையும் ஆக்கிரமித்துள்ளார்’. ‘அவரிடமிருந்து திரைத்துறையை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.



























