“பெரியாரின் குரலே இசையாய் வந்தது”.. ஆதரிக்கும் திருமாவளவன்.. கொந்தளிக்கும் வலதுசாரிகள்..
கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் ப.ரஞ்சித்தின் இசைக்குழு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாடகி இசைவாணி, பெண்கள் சபரிமலை செல்ல வேண்டும் என பாடல் ஒன்றை பாடினார். இப்பாடல் வைரலாக இது பெரிய சர்ச்சையாக வெடித்தது. மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சில தினங்களுக்கு முன் அப்பாடகிக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, “பெரியாரின் குரலே இசையாய் வந்ததே தவிர மத உணர்வை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாடப்பட்ட பாடல் அல்ல” எனவும், ” அதானி பிரச்சனையை திசைதிருப்புவதற்காகவே இசைவாணி பிரச்சனையை தமிழ்நாட்டில் பெரிது படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.


























