மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் – உயர்நீதி மன்ற வழக்கு பைசல்!

0
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் - உயர்நீதி மன்ற வழக்கு பைசல்!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் - உயர்நீதி மன்ற வழக்கு பைசல்!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் – உயர்நீதி மன்ற வழக்கு பைசல்!

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளையும் செய்து வரும் நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

மூன்றாம் பாலினத்தவர்கள்:

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட வசதிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் இருவரும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

சென்னை வெள்ளத்தால் கேஸ் டெலிவரி பாதிப்பு – உணவுக்கு திண்டாடும் மக்கள்!!

இவர்களுக்கு எதிரான பிரச்சினை, வன்முறைகளை தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு சட்ட உதவிகள் செய்யப்படுகிறது. மேலும் கல்வி போன்ற பல்வேறு வசதிகளுக்காகவும் ஆண்டுதோறும் ரூபாய் ஒரு கோடி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர் நலனுக்காக பாடுபடும் நபர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் மதிப்பில் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. இவர்களுக்கு தனி தையல் கூட்டுறவு சங்கம் உருவாக்கி தொழிற் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் பைசல் செய்து வைத்தனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!