சென்னை வெள்ளத்தால் கேஸ் டெலிவரி பாதிப்பு – உணவுக்கு திண்டாடும் மக்கள்!!

0
சென்னை வெள்ளத்தால் கேஸ் டெலிவரி பாதிப்பு - உணவுக்கு திண்டாடும் மக்கள்!!
சென்னை வெள்ளத்தால் கேஸ் டெலிவரி பாதிப்பு - உணவுக்கு திண்டாடும் மக்கள்!!
சென்னை வெள்ளத்தால் கேஸ் டெலிவரி பாதிப்பு – உணவுக்கு திண்டாடும் மக்கள்!!

சென்னை முழுவதும் சூழ்ந்துள்ள பெரு வெள்ளத்தால் கேஸ் டெலிவரி செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கேஸ் டெலிவரி:

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இலவசமாகவே சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்து வருகின்றனர். மேலும், சிலிண்டருக்கு விண்ணப்பித்து அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வழங்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது சென்னையில் பெய்த பேய் மழையால் தற்போது வரையிலும் வெள்ளநீர் முழுவதுமாக வற்றாமல் இருக்கிறது. இதனால், பெரும்பாலான குடியிருப்பில் இருக்கும் மக்கள் உணவுக்கு கூட வழி இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

காய்கறி விலை திடீர் உயர்வு.. மிக்ஜாம் புயல் எதிரொலி – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இதனால், அவர்களுக்கு தேவையான உணவுகள் அனைத்தும் படகுகள் மூலமாக சென்று ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கேஸ் டெலிவரியும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து செயல்களும் இயல்பு நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!