இந்த ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி ஊழியர்களுக்கு இரண்டு நிலுவைத் தொகையில் இருந்து மற்றொரு அகவிலைப்படியை வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது
அகவிலைப்படி உயர்வு
தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 10 வது ஆண்டு விழாவில் பரிசு ஒன்றை வழங்க இருக்கிறது. அதாவது நிலுவையில் உள்ள இரண்டு நிலுவைத் தொகையில் இருந்து மற்றொரு அகவிலைப்படியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து டிஎஸ்ஆர்டிசி தலைவர் பாஜிரெட்டி கோவர்தன் கூறுகையில் நிலுவையில் உள்ள டிஏ தவணை மாநில உருவாக்க தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
WHATSAPP செயலியின் BUG பிரச்சனைக்கு முடிவு – பயனர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்!
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022ல் நிலுவையில் உள்ள 4.9 சதவீத டிஏ மற்றும் ஜூன் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் மீதமுள்ள ஒரு DA விரைவில் ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும்,” என்று TSRTC நிர்வாக இயக்குனர் VC சஜ்ஜனார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது