தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

0
??????????? 15 ??????????????? ????? ??????...!! ?????? ?????? ????? ????? ??????????  
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்...!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

 

தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

EPFO அமைப்பில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்.. PF வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. அரசு அறிவித்த இறுதி முடிவு..

அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!