
EPFO அமைப்பில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்.. PF வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. அரசு அறிவித்த இறுதி முடிவு..
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் பங்களித்து வருகின்றனர். இந்த PF கணக்கில் பணியாளர்களும், முதலாளிகளும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றனர். இதை சரிவர நிர்வகிக்கும் EPFO அமைப்பானது ஒவ்வொரு நிதியாண்டிலும் இதற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித வட்டி வழங்குகிறது. “அந்த வகையில் 2023-24 நிதியாண்டிற்கான PF வட்டி விகிதம் 8.25% என நிர்ணயிக்கப்பட்டது”.
பொதுவாக, “EPFO தனது வட்டி விகிதத்தை ஆண்டுதோறும் முதலீட்டு வருமானம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொண்டு முடிவு செய்கிறது. இந்நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில், 2024-25 நிதியாண்டிற்கான PF வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது”. மேலும், முந்தைய 4 ஆண்டுகளில் இருந்ததைவிட இந்த வட்டி அதிகமாக வழங்கப்படுவதால், வரும் காலங்களில் வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, “குறைந்தபட்சம் 1 ஆண்டு EPF கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், நன்மை பெற முடியும் என்ற நிபந்தனை தற்போது நீக்கப்பட்டுள்ளது என்றும், சமீபத்திய மாதங்களில் ஊழியர் PF கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், அவரது குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையை ஆனது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























