
“திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்”…!! சட்டசபையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி தகவல்
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, “ஒவ்வொரு எம்.எல்.ஏ வும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும்” என்றும், “அதனை நிறைவேற்றுவதே இதன் நோக்கம்” என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் அனைத்து கோரிக்கைகளும் எந்தவித கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, கோவை மற்றும் திருச்சியில் நடைபெறும் நூலக பணிகள் குறித்து பேசினார். அப்போது, திருச்சியில் சுமார் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் நூலகத்திற்கு “கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர்” பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். மேலும், கோவையில் நூலகம் கட்டும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரையில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


























