தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் 6 மருத்துவமனைகள்…!! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

0
??????????? ??????? ???????????? 6 ??????????????...!! ????????????? ???????? ????????? ?????? ?????
தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் 6 மருத்துவமனைகள்...!! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் 6 மருத்துவமனைகள்…!! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும், தமிழகத்தில் கூடுதலாக 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

அதாவது, தமிழகத்தில் ரூ. 1,018 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்க கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புதிய மருத்துவமனைகள் வருகின்ற ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ், முக்கிய விபத்து பகுதிகளில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிதிஉதவி தற்போது உயர்த்தப்பட்டு இனிமேல் ரூ. 2 லட்சம் ஆக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!